×

சென்னையில் 57.97% ஆண்கள், 42.03% பெண்கள் கொரோனாவால் பாதிப்பு; மண்டலவாரி விவரம் வெளியீடு!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,569
 

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,569 பேரும் அண்ணா நகரில் 2,432 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,964 பேரும் தேனாம்பேட்டையில் 2,163 பேரும் தண்டையார்பேட்டையில் 1,690 பேரும் அடையாறு மண்டலத்தில் 1,479 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால்பாதிக்கப்பட்ட 71,230 பேரில் 22,374 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 57.97% ஆண்கள், 42.03% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.