×

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்திட”-  உண்மை முகத்தை காட்டிய காங்கிரஸ்

 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்திட  கண்துஞ்சாது, அயராது பாடுபடுவோம் என சென்னையில் நடந்த காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நடந்த காங். சிறப்பு பொதுக்குழுக்கூட்டத்தில், “தமிழ்நாடு அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காங். கட்சி தனது கொள்கைகளைப் பறைசாற்றுவதன் மூலம் தனித்தன்மையோடு இயங்கி, நமக்கான கருத்தியலை முன்வைத்து தனித்துவமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதன் மூலமே தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்திட கண்துஞ்சாது, அயராது பாடுபடுவோம்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியை பிரதமராக இருக்க மனம் இல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து தான் அடுத்த பிரதமர் வரவேண்டும் என முதல்வர் விஜய்யை குறிப்பிட்டு தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இரண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு கூட்டணியில் பங்கெடுத்துள்ள காங்கிரஸ் தனது உண்மையான எண்ணத்தை தற்போது வெளிப்படுத்தி உள்ளது.