வெறிச்சோடி காணப்படும் சென்னை
Nov 8, 2026, 13:47 IST
கடந்த 3 நாட்களாக தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களை நோக்கி பொதுமக்கள் படை எடுத்த நிலையில், தற்போது வாகன நெரிசல் குறைவாக உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள நிலையில், சென்னை சாலைகள் வெறிச்சோடியுள்ளது. சுமார் 15 லட்சம் பேர் சொந்த ஊருக்குச் சென்றுள்ள நிலையில், சாலைகளில் கார்கள், இருசக்கர வாகனங்கள் எனச் சில வாகனங்கள் மட்டுமே செல்கின்றன.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளி பண்டிகையை ஒட்டி நவ.5 முதல் 8ஆம் தேதி வரை மொத்தம் 13,108 பேருந்துகளில் 5.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
-