☰
×

சென்னையில் காற்றின் தரம் 'மிக மோசம்'

 

சென்னையில் காற்று மாசு மிதமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளிக்கு மக்கள் பட்டாசு வெடிக்க தொடங்கியதால் சென்னையில் காற்று மாசு மிதமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மணலியில் காலை நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு 246 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் காற்றின் தரக்குறியீடு 153 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அரும்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதியில் திருப்திகரமான அளவில் காற்றின் தரம் உள்ளது. நேற்று காற்றின் தர குறியீடு 56ஆக பதிவான நிலையில் இன்று காற்றின் தரம் 71ஆக பதிவாகியுள்ளது.  சென்னையில் மேகமூட்டத்துடன் காற்று மாசும் கலப்பதால் சாலைகள் தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு கொண்டவர்கள் மூச்சு விடுவதில் சிரமப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோல் டெல்லியில் காற்று மாசு மீண்டும் மோசமடைந்து சராசரி காற்றின் தரக்குறியீடு (AQI) 398ஆக பதிவாகியுள்ளது. இந்தியா கேட் சுற்றியுள்ள இடங்களில் காற்றின் தரக்குறியீடு (AQI) 398ஆக பதிவாகி 'மிக மோசம்' என்ற நிலையை அடைந்தது.