×

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி  - சென்னை உயர்நீதிமன்றம்.. 

 

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி  அளித்துள்ளது.  

கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தப்படும் என அறிவித்தது.  இதற்காக, அந்தந்த மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில்,   அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணம் காட்டி  அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.  

 ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இன்று உத்தரவு பிறப்பித்தார்.  அதில், காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டதாகவும்,  கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைதான் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். புதிய வழக்குகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நீதிபதி, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவிலில் நான்குனேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என்றார்.  

இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள்  உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  . உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் எனவும்,   6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் என்றும்,  இந்த 6 இடங்களில்  2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என்றும் நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார்.