"பெண்களை மதிக்குற ஆண்கள் நிச்சயம் சமையல் கத்துக்கணும்"- செஃப் தாமு
லண்டன்ல என் கையில கின்னஸ் புத்தகத்தைக் கொடுத்தப்போ வந்த ஆனந்தம்தான். வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம் அது! என செஃப் தாமு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கின்னஸ் உலக சாதனைப் படைத்த, உலகப் புகழ்பெற்ற சமையல் கலைஞர் தாமு உடல்நலக்குறைவால் காலமானார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவர், திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்கள் என பல்துறை செயற்பாட்டாளராக தாமு திகழ்ந்தார்.
இந்நிலையில் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் குறித்து தாமு பகிர்ந்த தகவல்கள், "செஃப்கள் மட்டும் இல்லை... குடும்ப வாழ்க்கையில இருக்குற எல்லா ஆண்களும் சமையல் செய்யக் கத்துக்கணும்.‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது!' -எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய இந்தப் புத்தகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். செஃப்கள் மட்டும் இல்லை... குடும்ப வாழ்க்கையில இருக்குற எல்லா ஆண்களும் சமையல் செய்யக் கத்துக்கணும். சொல்லப்போனா பெண்களை மதிக்குற ஆண்கள் நிச்சயம் சமையல் கத்துக்கணும். சமத்துவத்துக்கான ஆயுதமா சமையலைப் பார்க்கிறேன்! 50 வயசுல, இடைவெளி இல்லாம 24 மணி நேரம் 30 நிமிஷம் 12 நொடி சமைச்சேன். மொத்தம் 617 உணவு வகைகள் பண்ணினேன். இப்போ அதையெல்லாம் நினைக்கிறப்போ எனக்கே ஆச்சர்யமா இருக்கு. அதைவிட ரொம்ப சந்தோஷம், லண்டன்ல அவங்க ஆபீஸ்ல என் கையில கின்னஸ் புத்தகத்தைக் கொடுத்தப்போ வந்த ஆனந்தம்தான். வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம் அது!
படிப்பு முடியும்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலமா பாம்பே தாஜ் ஹோட்டலில் வேலை கிடைச்சுது. அங்க போகும்போது எனக்கு இந்தி தெரியாது. தங்குறதுக்கு இடமும் இல்லை. வொர்க் முடிச்சிட்டு வந்து ரயில்வே ஸ்டேஷன்ல தூங்கி, அங்கேயே குளிச்சுட்டு தாஜுக்கு வேலைக்குப் போவேன். இப்படியே பல மாசங்கள் அங்கே இருந்தேன். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா பின்னாடி கஷ்டப்படாம இஷ்டப்படி வாழலாம். அதனால மும்பை அனுபவத்தை என்ஜாய் பண்ணினேன். சென்னைக்கு வரும்போது ஏற்கெனவே நிறைய அடிவாங்கிப் பழகிட்டதால எல்லாமே சுலபமாகிடுச்சு. இந்த இண்டஸ்ட்ரியில கிட்டத்தட்ட 14 வருஷம் இருந்தேன். இன்னைக்கு கவனிக்கப்படுற இடத்துல இருக்கேன்னா ஆரம்பகாலத்துல அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன்" என்றார்.