☰
×

செஃப் தாமுவுக்கு பிடித்தமான உணவுகளை செய்து படையல்: விஜய் டிவி புகழின் நெகிழ்ச்சியான தீபாவளி பதிவு!

 

சமையல் கலை நிபுணரான செஃப் தாமு ஏராளமான முன்னணி ஓட்டல் நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். மேலும், முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜட்ஜாகவும் ரசிகர்களை கவர்ந்தார்.

டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட செஃப் தாமுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் மறைவு செய்து கலங்கிய புகழ், அப்பா... என்னால் வர முடியவில்லையே.. இப்போ டிக்கெட் போட்டாலும் வர 2 நாள் ஆகுமே... கடைசியா உங்களோட முகத்தை கூட பார்க்க முடியாம போயிடுச்சே.. அப்பா இல்லாமல் நான் அனாதையாகிவிட்டேனே.. எனக் கண்ணீர் வடித்தார். புகழின் இந்த வீடியோவுக்கு பலரும் ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் செஃப் தாமுவின் புகைப்படத்தை வைத்து, அவருக்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்து தீபம் ஏற்றி அவருக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து படையல் வைத்து வழிபட்டுள்ளார். மறுபக்கம் தன் சொந்த அப்பாவின் போட்டோவை வைத்து, அவரின் துணிகளை வைத்து வழிபட்டு உருக்கமான பதிவினை போட்டுள்ளார். அதில், தீபாவளி வந்துவிட்டது... என் வீட்டில் தீப ஒளி ஏற்றப்படுகிறது. ஆனால் என் அப்பா நீ இல்லையே... பட்டாசு பற்றிய நினைப்பு வரும்போதெல்லாம் உன்னுடைய இறுதி ஊர்வலம்தான் நினைவுக்கு வருகிறது. வருடா வருடம் ஒரு வேஷ்டி இருந்தால் போதும் என்பாய். இந்த வருடமும் உனக்காக ஒரு வேஷ்டி இருக்கிறது. ஆனால் நீ இல்லையே என்று தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.