×

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கட்டண நிர்ணயம் – புலம்பும் சமூக ஆர்வலர்கள்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு விதித்துள்ள தனியார் மருத்துவமனைகளின் கட்டண நிர்ணயம் மிக அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா சிகிச்சை கட்டணம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். அதனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணத்தை கட்டுப்படுத்தி அதை முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
 

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு விதித்துள்ள தனியார் மருத்துவமனைகளின் கட்டண நிர்ணயம் மிக அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா சிகிச்சை கட்டணம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். அதனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணத்தை கட்டுப்படுத்தி அதை முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கதின் (ஐ.எம்.ஏ) தமிழக பிரிவு கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. அதன்படி லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக ரூ.2,31,820 வரை வசூலிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக அதிகபட்சமாக ரூ.4,31,411 வரை வசூலிக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ள இந்த கட்டண தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.