×

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் எவ்வளவு?!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கொரோனா பரிசோதனைக்கு ரூ.4,500 செலுத்த வேண்டும் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில்
 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கொரோனா பரிசோதனைக்கு ரூ.4,500 செலுத்த வேண்டும் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழகப் பிரிவு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதில், கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு ரூ.23,182 வசூலிக்கலாம் என்றும் 10 நாளுக்கு ரூ. 2,31,870 வரை வசூலிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தால் ஒரு நாளைக்கு 2,31,870 வசூலிக்கலாம் என்றும் 17 நாட்களுக்கு ரூ. 4,31,411 வரை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.