அரசியலில் திடீர் திருப்பம் : புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர ராவின் மகள் கவிதா..!
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த 2025 ஆம் ஆண்டு அக்கட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டியதையடுத்து அவர் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகிய கவிதா விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவேன் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய கவிதா, வரும் ஏப்ரல் 25 அன்று முனீராபாதில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் "தெலுங்கானா ராஷ்ட்ர சேனா” (TRS) என்ற பெயரில் புதிய கட்சியை கவிதா இன்று தொடங்கினார். சகோதரர் கே.டி.ராமாராவ் ஆதரவாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கட்சியை கவிதா தொடங்கி உள்ளார்.