×

குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு

 

சொந்த ஊரில் குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடினார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. 


ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் சங்கராந்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கிராமத்தில்  பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது இதில் பெண்கள் போட்டியிட்டு வண்ணமயமான ரங்கோலி கோலமிட்டு செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 

இதனையடுத்து குழந்தைகளுக்காக பல்வேறு வகையான கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் உருளைக்கிழங்கு சேகரிப்பு, பலூன் விளையாட்டு, கோனி பை நடைப்போட்டி, இசை நாற்காலிகள், கரண்டியில் எலுமிச்சை, வால் பறித்தல், தற்காப்பு போன்ற விளையாட்டுகள் வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த போட்டிகளை அங்குள்ள ஜில்ல பரிஷத் பள்ளி விளையாட்டு மைதானத்தில் போட்டிகளைப்  முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி, அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ், நாரா பிராமணி, எம்.பி. பரத், அவரது மனைவி தேஜஸ்வினி, சந்திரகிரி எம்.எல்.ஏ. புலிவர்த்தி நானி, ஸ்ரீகாளஹஸ்தி எம்.எல்.ஏ. போஜ்ஜலா சுதீர் ரெட்டி, மாநில விளையாட்டு ஆணையத் தலைவர் அம்மினேனி ரவி நாயுடு, திருப்பதி மாவட்ட கலெக்டர் டாக்டர் வெங்கடேஸ்வர், மாவட்ட எஸ்பி சுப்பராயுடு பங்கேற்று பார்வையிட்டனர். பின்னர்
போட்டிகளில் சிறப்பாக விளையாடு  வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

கிராமப்புற கலாச்சாரம் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும் ஒரு திருவிழா  சூழலில் முதல்வரின் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இன்று ,நாளையும்,  நாளை மறுநாள் வரை கிராமத்தில் தங்கி போகி ,பொங்கல் கொண்டாடி கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து 15 ம் தேதி மாலை முதல்வர் உள்பட குடும்பத்தினர் தலைநகர் அமராவதி செல்ல உள்ளனர்.