×

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தேனி,விழுப்புரம்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. அதே போல கொடைக்கானல் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில், அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலோர
 

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தேனி,விழுப்புரம்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. அதே போல கொடைக்கானல் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில், அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

Torrential rain causing flood.

கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.