×

“பிப்ரவரியில் அதீத மழைக்கு வாய்ப்பு” – பிரதீப் ஜான் எச்சரிக்கை!

இந்தாண்டு பிப்ரவரியில் நிச்சயமாக அசாதாரண மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழைப் பொழிவும் இயற்கை சீற்றமும் இருந்தது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை தொடர்ந்தது. அத்துடன் வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதம் அதிக மழைப்பொழிவு இருந்தது. தற்போது தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் அசாதாரண மழை பொழிவு இருக்கும் என தனியார்
 

இந்தாண்டு பிப்ரவரியில் நிச்சயமாக அசாதாரண மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழைப் பொழிவும் இயற்கை சீற்றமும் இருந்தது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை தொடர்ந்தது. அத்துடன் வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதம் அதிக மழைப்பொழிவு இருந்தது. தற்போது தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் அசாதாரண மழை பொழிவு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மழை குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக காணப்படும் என்று அவர் கணித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் நாசம் அடைந்தன. அதேபோல் 2000ம் ஆண்டு பிப்ரவரியில் கடலூரில் கனமழை கொட்டி மக்கள் அவதிக்குள்ளாகினர். அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதீத கனமழை இருக்கும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.