முதல்வருடன் லண்டன் செல்லாதது ஏன்?- அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட சான்றிதழ்
முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றபோது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சருடன் செல்லாதது சர்ச்சையான நிலையில் அவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ்களை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த வாரம் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. முதல்வர் லண்டன் பயணத்தில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்து கொள்ளாததற்கு “நான்கு நாட்கள் உடல்நிலை சரியில்லை” அதை வெளியே சொல்ல முடியாது என ஆதவ் அர்ஜூனா கூறியதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றபோது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சருடன் செல்லாதது சர்ச்சையான நிலையில் அவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ்களை வெளியிட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழ்களை வெளியிட்டுள்ளார் அமைச்சர் கீர்த்தனா.