×

புதிய புயலை கண்டு அஞ்சிய மத்தியக்குழு! நிவர் புயல் பாதிப்புகளை காண டிச.5 வருகை

கடந்தவாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வீசிய நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நாளை தமிழகம் வரவிருந்தது. அவர்களுடன் வேளாண்மை, மீன்வளத் துறை, நிதி, நகர்ப்புற வளர்ச்சித்துறைகளின் பிரதிநிதிகள் குழுவினரும் தமிழகம் வரவிருந்தனர். இந்நிலையில் நிவர் புயல் சேத பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய குழு வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவினர் டிசம்பர் 5ஆம் தேதி
 

கடந்தவாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வீசிய நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நாளை தமிழகம் வரவிருந்தது. அவர்களுடன் வேளாண்மை, மீன்வளத் துறை, நிதி, நகர்ப்புற வளர்ச்சித்துறைகளின் பிரதிநிதிகள் குழுவினரும் தமிழகம் வரவிருந்தனர்.

இந்நிலையில் நிவர் புயல் சேத பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய குழு வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவினர் டிசம்பர் 5ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் புதிய புயல் உருவாகி உள்ளதால் மத்திய குழுவின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. தமிழகத்தில் பெருமளவு சேதம் இல்லாவிட்டாலும் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். அத்துடன் புதுச்சேரிக்கு அருகில் இப்புயல் கரையை கடந்தாலும் அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.