×

இந்த புத்தாண்டு வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக மலரட்டும் - எல்.முருகன் வாழ்த்து

 

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மலரட்டும் 2024- ஆங்கிலப் புத்தாண்டு, விலகட்டும் தமிழகத்தில் அரசியல் இருள், பிறக்கட்டும் தமிழ் மண்ணில் புத்தொளி, பரவட்டும் பிரதமர் மோடியின் எழுச்சி கனல், 2024-ம் ஆண்டு மலரும் இந்த இனிய நேரத்தில் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியும் மகிழ்ச்சியும் பிறக்கட்டும். நம் பாரத பிரதமர் மோடி  ஜி அவர்களின் தலைமையில் பாரத தேசம் முழுவதும் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வளர்ச்சி பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் இந்த ஆண்டில் மற்றுமொறு புதிய உச்சத்தை தொடரட்டும்.