☰
×

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவா?- ஆளுநரிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு 

 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது நடந்த தொடர் கொலை சம்பவங்கள் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் (Union Home Ministry) தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக்டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் 8-ம் தேதி தீபாவளி அன்றும், 9-ம் தேதி அதிகாலையும் தமிழகம் முழுவதும் 17 கொலைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் தரப்பு 10-11 என சொன்னாலும், எதிர்க்கட்சிகள் 17 என கூறுகின்றன. சென்னை முதல் தேனி வரை பல மாவட்டங்களில் கொலைகள் நடந்ததாக செய்திகள் வெளியானது. இதில் மிக முக்கியமானது, தேனியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) ஒருவர் இளைஞர்கள் கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். குற்ற சம்பவங்களில் 15 ஆண்கள், 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக உள்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் சி.ஜோசப் விஜய் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்த நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநரிடம், சமீபத்திய வன்முறை சம்பவங்கள் குறித்த மதிப்பீடு, மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? பொது அமைதியை நிலைநாட்ட என்ன திட்டம்? என விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.