☰
×

ஆதவ் அர்ஜூனா கேட்டவுடன் நிதி ஒதுக்கிய மத்திய அரசு 

 

தமிழ்நாட்டில் 6,513 கோடி ரூபாய் மதிப்பில் 2,221 சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர்  ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2026-27 இன் கீழ், 4,126 கி.மீ நீளத்துக்கு 2,221 சாலைப் பணிகளுக்கு ரூ.6,513.18 கோடி நிதி ஒதுக்கி அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாநில நெடுஞ்சாலைகளில் 589 பணிகளுக்கு ரூ.2,722.04 கோடியும், முக்கிய மாவட்ட சாலைகளில் 419 பணிகளுக்கு ரூ.1,009.67 கோடியும், மற்ற மாவட்ட சாலைகளில் 1,213 பணிகளுக்கு ரூ.2,781.47 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்காக, மற்ற மாவட்ட சாலைகளை ஒற்றை வழிச்சாலையில் இருந்து இடைநிலை வழிச்சாலையாக அகலப்படுத்த 446 பணிகள், 1,373.76 கி.மீ நீளத்துக்கு ரூ.1,924.20 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், சிறப்பு கூறு திட்டத்தின் கீழ் மற்ற மாவட்ட சாலைகளில் 87 பணிகள் ரூ.304.76 கோடி செலவில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 6,513 கோடி ரூபாய் மதிப்பில் 2,221 சாலைப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 4,126 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. ரூ. 2,010.28 கோடியில் 619.07 கி.மீ சாலைகள் இருவழி அல்லது நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுகிறது. ரூ.74.75 கோடியில் 5 புதிய பாலங்கள் அமைக்கும் பணிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலை நேற்று (17.11.2026) டெல்லியில் நேரில் சென்று சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியுதவி கோரி கோரிக்கை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடதக்கது.