×

ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்..!!

 

தவறான விளம்பரம் செய்ததற்காக ரேபிடோ நிறுவனத்திற்கு  மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தவறான விளம்பரம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை வெளியிட்டதற்காக ரேபிடோ ஆன்லைன் தளத்திற்கு 10,00,000 அபராதம் செலுத்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐந்து நிமிடத்தில் ஆட்டோ அல்லது 50 பெறுங்கள் என சலுகையில் அடிப்படையில் பாதிக்கப்பட்டு இழப்பீட்டை பெறாத நுகர்வோருக்கு தாமதம் அல்லது நிபந்தனை இல்லாமல் அந்தத் தொகை முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்யவும் ஆன்லைன் ரைடு ஹெயிலிங் தளத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்  "ஆட்டோ இன் 5 நிமிடம் அல்லது ₹50 பெறுங்கள்" மற்றும் "உத்தரவாத ஆட்டோ" ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்த ரேபிடோவின் தவறான விளம்பரங்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும்,விரிவான ஆய்வுக்குப் பிறகு, இந்த விளம்பரங்கள் தவறானவை, தவறாக வழிநடத்தும் மற்றும் நுகர்வோருக்கு நியாயமற்றவை என்று  கண்டறிந்துள்ளது, மேலும் தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் தரவின்படி, ஏப்ரல் 2023 முதல் மே 2024 வரை  ரேபிடோ மீது 575 புகார்களும் மற்றும் ஜூன் 2024 முதல் ஜூலை 2025 வரை 1,224 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த புகார்கள் மீதான விசாரணையின் போது , 

ரேபிடோவின் விளம்பரங்களில் "T&C Apply" என்ற மறுப்பு மிகவும் சிறியதாகவும் படிக்க முடியாத எழுத்துருவிலும் காட்டப்பட்டுள்ளது.வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ரூபாய் என்பது பணம் அல்ல, அது "Rapido நாணயங்கள்" ஆகும். இதிலும் இது 50 வரையிலான நாணயங்கள் மட்டுமே,மேலும் இது சவாரிகளுக்கு மட்டுமே மீட்டெடுக்க முடியும் மற்றும் 7 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் 

 இத்தகைய கட்டுப்பாடுகள் சலுகையின் மதிப்பைக் கணிசமாகக் குறைத்து, நுகர்வோரை நியாயமற்ற முறையில் குறுகிய காலத்திற்குள் இந்த நிறுவனத்தின் மற்றொரு சேவையைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தின. இத்தகைய குறைபாடுகள் உறுதிசெய்யப்பட்ட சேவையின் தவறான தோற்றத்தை உருவாக்கி நுகர்வோரை தவறாக வழிநடத்தின. இதுபோன்ற முரண்பாடான நிலைப்பாடு,விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தைப் பற்றி நுகர்வோரை தவறாக வழிநடத்தியது.இது விதிமீறலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில், ரேபிடோவுக்கு எதிராக நுகர்வோரிடமிருந்து புகார்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.அந்த வகையில் ரேபிடோ 120 க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுகிறது, மேலும் தவறான விளம்பரம் நாடு முழுவதும் பல பிராந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகளாக தீவிரமாக இயக்கப்பட்டது.இந்நிலையில் சட்டத்திற்கு நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க நலன்கருதி , ரேபிடோ-ஆன்லைன் ரைடு ஹெயிலிங் தளத்திற்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளது.

மேலும் பெரிய வாக்குறுதிகளை அளிக்கும் அல்லது நிபந்தனைகளை விளக்காமல் "உத்தரவாதம்" அல்லது "உறுதியளிக்கப்பட்டது" போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நுகர்வோரை ஆணையம் வலியுறுத்துகிறது.இது போன்ற புகார்களுக்கு தேசிய நுகர்வோர் உதவி எண்ணை 1915க்கு அழைக்கலாம் எனவும் அல்லது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.