×

நெல் ஈரப்பதம்: சீர்காழியில் மத்தியக் குழு ஆய்வு!

சீர்காழி கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் மையங்களில் மோசடி நடப்பதாகவும், விவசாயிகள் ஈரப்பதத்துடன் கொண்டு வரும் நெல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது. இது அரசின் கவனத்துக்கு எட்டிய நிலையில், ஈர்ப்பதத்துடன் நெல் இருந்தால் திருப்பி அனுப்பக்கூடாது என கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நெல்லின் ஈர்ப்பத அளவை 17ல் இருந்து 22% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு
 

சீர்காழி கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் மையங்களில் மோசடி நடப்பதாகவும், விவசாயிகள் ஈரப்பதத்துடன் கொண்டு வரும் நெல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது. இது அரசின் கவனத்துக்கு எட்டிய நிலையில், ஈர்ப்பதத்துடன் நெல் இருந்தால் திருப்பி அனுப்பக்கூடாது என கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நெல்லின் ஈர்ப்பத அளவை 17ல் இருந்து 22% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு வரவிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வின் முடிவில் ஈரப்பத அளவை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நெல் ஈரப்பதம் குறித்து சீர்காழி அருகே புத்தூர் நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈர்ப்பத மாதிரிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகளுடன் தமிழ்நாடு வாணிபக்கழக முதுநிலை மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.