×

செந்தில்பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நிறைவு

 

கரூர் துயர சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆறு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. 

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜன.12 மற்றும் 19ம் தேதிகளில் நடிகர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். நேற்று  மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது முறையாக விஜய் விசாரணைக்கு ஆஜரானார். 

கரூர் பெருந்துயரத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெக தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பிய சிபிஐ, இன்று அவரிடம் விசாரணை நடத்தியது. கரூர் விவகாரத்தில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலஜியிடன் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. அவரிடம் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை செய்தனர். காலையில் அனுமதிக்கப்படாத அவரது காரை முடிவில் சிபிஐ அலுவலகத்திற்குள் வரவழைத்து உள்ளிருந்தவாறே புறப்பட்டு சென்றார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி உடனடியாக சென்றது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களில் செந்தில்பாலாஜியின் அறக்கட்டளை வாசகங்கள் இருந்ததாகவும் தவெக குற்றஞ்சாட்டியிருந்தது.