2 நாட்கள் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
இரண்டு நாட்கள் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ விசாரணைக்காக மூன்றாவது முறையாக விஜய்க்கு சமீபத்தில் சமன் அனுப்பப்பட்ட நிலையில், கட்சி நிகழ்வுகள் இருப்பதால் மாற்று தேதி அல்லது சென்னையில் உள்ள அலுவகத்தில் ஆஜராவதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவற்றைப் பரிசீலித்த சிபிஐ, இன்று டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கூறியிருந்தது. அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்காக விஜய், நேற்று மதியம் தனி விமான மூலம் சென்னையில் இருந்து டெல்லி செல்ல உள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நாளையும் திங்கட்கிழமையான நாளை மறுநாளும் விஜய் இடம் விரிவான விசாரணை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாள் விசாரணை முடிந்ததற்கு பிறகு தான் அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய இருக்கிறார்கள். எனினும் இரண்டு நாட்களுக்கு தயாராக வாருங்கள் என்று தான் சிபிஐ அதிகாரிகள் விஜய் தரப்பிடம் கூறி இருக்கிறார்கள்.