×

காவலர் மகாராஜனிடம் விசாரிக்கவில்லை! – சி.பி.சி.ஐ.டி ஐஜி சங்கர் விளக்கம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் மகாராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சி.பி.சி.ஐ.டி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த அன்று இரவு பணியிலிருந்த காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. நேற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்னிலையில் காவலர் ரேவதி ஆஜராகி
 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் மகாராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சி.பி.சி.ஐ.டி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த அன்று இரவு பணியிலிருந்த காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. நேற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்னிலையில் காவலர் ரேவதி ஆஜராகி பதில் அளித்தார். அதே போல் மற்றொரு காவலர் மகாராஜனும் ஆஜராகி விளக்கம் அளித்ததாக செய்திகள் வெளியாகின.

வழக்கு தொடர்பாக ஜஜி சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், “தலைமைக் காவலர் ரேவதியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் மற்றொரு காவலர் மகாராஜன் ஆஜராகவில்லை. அவர் ஆஜராக வந்த தகவல் தவறானது. கைது செய்யப்பட்டவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.