#BREAKING டெல்லியில் நாளை அவசரமாக கூடும் காவிரி மேலாண்மை ஆணையம்
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை அவசரமாக கூடுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாடம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடத்தப்படும்.
அந்தவகையில் டெல்லியில் நாளை காலை காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் நடைபெறுகிறது. காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்செரி மாநில அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.