×

சாதிவாரி சர்வே! சாதித்த பாமக... எத்தனை போராட்டம்?- முழு பின்னணி

 

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது முதலே சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி போராடி வருகிறது. அதற்கு முன்பாக 1987 சாலை மறியல் போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாகவும் வலியுறுத்தப்பட்டது.

பாமக நடவடிக்கைகள் பட்டியல்

13.11.1998 இல் சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் சென்னையில் பாமக நடத்தியது.

 24.10.2008 சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி 140க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலிடம் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அளித்தார்.

17.09.2017 விழுப்புரம் பாமக சமூகநீதி மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல் ஒவ்வொரு மாநாட்டிலும், ஒவ்வொரு பொதுக்குழுவிலும், ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை பாமக முன்வைத்தது.

19.02.2019 அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

10.10.2019 பிரதமர் மோடியை மருத்துவர் அய்யா அவர்களும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் நேரில் சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தினார்கள். 

06.02.2020 தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

01.11.2020 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சாதிவாரி சர்வே நடத்த வலியுறுத்தினார். 2019-2020 ஆண்டுகளில் இதுபோன்று 6 முறை முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

01.12.2020 சாதிவாரி சர்வே கோரி சென்னை மன்றோ சிலை அருகில் மாபெரும் போராட்டம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

01.12.2020 தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் (இந்த அறிவிப்பு பின்னர் திமுக ஆட்சியில் கைவிடப்பட்டது.)

08.04.2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

29.05.2022 இதே கோரிக்கைக்காக மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினார்.

04.07.2022, 10.09.2022, 17.02.2023, 30.04,2023, 10.05.2023, 09.10.2023, 24.11.2024 என தொடர்ச்சியாக சாதிவாரி சர்வே கோரி முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாமக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

09.10.2023 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.

26.10.2023 மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பம், அசோக் வர்தன் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது.

மதுரையில் 09.12.2023, கோவையில் 23.12.2023, சிதம்பரத்தில் 03.01.2024, வேலூரில் 11.01.2024 ஆகிய இடங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

28.12.2023 மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மருத்துவர் அய்யா இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

17.12.2025 இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆம் ஆண்டுவிழா நாடாளுமன்ற விவாதத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பேசினார்.

10.02.2025 தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டியதன் தேவை குறித்த அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாயங்கள் கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.

20.02.2025 தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தக் கோரி பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாயங்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

11.05.2025 மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டில் தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

05.06.2026 மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் "2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

09.06.2026 முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து "2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" எனும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அளித்த மனு அளித்தார்!

18.06.2026 "சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தும்" என தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.