#BREAKING தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு
Aug 17, 2026, 21:23 IST
#BREAKING தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவுசெய்தியாளர்களை தாக்கிய வழக்கில் 21 நாட்களுக்குப் பிறகு சோளிங்கர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கபில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர்களைத் தாக்கிய புகாரில், ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கபில் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் தளம் ஒன்றில் வீடியோ பதிவிட்ட நபர் ஒருவரை, எம்.எல்.ஏ., அவரது சகோதரர் தனஞ்செழியன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் தாக்கப்பட்டு, செல்போன்களும் சேதப்படுத்தப்பட்டன. இச்சம்பவம் நடந்து 21 நாட்களுக்குப் பிறகு, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.