×

தடையை மீறி போராட்டம்: மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சியினர் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடத்தினர். கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திமுகவினரின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் முத்தரசன், கனிமொழி,
 

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சியினர் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடத்தினர். கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திமுகவினரின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் முத்தரசன், கனிமொழி, வைகோ, பாலகிருஷ்ணன் , திருநாவுக்கரசர், திருமாவளவன், வேல்முருகன், பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 1,600 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின், கனிமொழி, ஆ. ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், வைகோ, திருநாவுக்கரசர், முத்தரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.