×

அருண் ஐபிஎஸ் மீது அவதூறு- சவுக்கு சங்கர் மீது வழக்கு

 

அருண் ஐபிஎஸ் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அருண் ஐபிஎஸ் மீது தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறார். மக்கள் மத்தியில் அருணுக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பணியில் சேர்ந்தது முதல் துணிச்சலாகவும், நேர்மையாகவும், குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்கும் அவர் மீது தனது சமூக வலைதளங்களில் பொய் செய்தி வெளியிட்டு வருவதோடு, வீடியோ மூலமும் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். உண்மையாகவும் நேர்மையுடனும் செயல்பட்டு வரும் அருண் ஐபிஎஸ் மீது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தை கட்டமைக்க சவுக்கு சங்கர் தொடர்ந்து முயன்று வருவதால், சவுக்கு சங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அருண் ஐபிஎஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.