☰
×

முதல்வரை அவதூறாக பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு

 

தமிழக முதல்வரை பொது மேடையில் அவதூறாகவும் இழிவாகவும் பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய திமுக பெண் நிர்வாகி ஒருவர், முதல்வர் விஜய்யை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  திமுக பெண் நிர்வாகி மேடையில் பேசுகையில், "சட்டப்பேரவையில் அமர்ந்து, எங்கள் தலைவர் (ஸ்டாலின்) அழகை குறை சொல்லும் நாயே... என் தலைவரை நிற்க வை. எங்க தலைவருக்கு வயது 74. உனக்கு என்ன டா வயது நாயே. உனக்கு வயது 52 வயது தான். உன்ன அந்த பக்கம் நிற்க வைக்கிறேன். நீ நில்லுடா. . .  நீ செத்து போன பிணம். . .  மூக்குல பஞ்சு, மாலை போட்டா நீ செத்து போன பிணம்... என் தலைவரு அழகு.. அவர் அழகுக்கு நீ தூசு டா. நீ ரீல் ஆட்சி பண்ண,,, ரீல்ஸ் போட்டு ஆட்சிய பிடிச்ச...” என பேசினார். இவரின் பேச்சை கேட்டு, மேடையில் அமர்ந்திருந்த மேயர் பிரியா சிரித்தார். அதே நேரத்தில், எம்பி கனிமொழி எதுவும் கண்டிக்காமல் மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்த திமுக வார்டு கவுன்சிலர் சுதா மற்றும் கட்சி நிர்வாகி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.