10-வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்ற செங்கோட்டையனுக்கு இடியால் வந்துவிழுந்த செய்தி
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் பிரபு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அதிமுக வேட்பாளர் பிரபு, அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்த மனுவில், சான்றளித்து கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞர் உரிமம் காலாவதியாகியிருப்பதாகவும், காலாவதியான நோட்டரி சான்றொப்பத்தை ஏற்ற கோபிசெட்டிப்பாளையம் தேர்தல் அதிகாரியின் செயல் சட்டவிரோதம் என்றும், ஆகவே செங்கோட்டையனின் வேட்புமனுவை ஏற்றது முறையற்றது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்தாண்டு விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். தவெக கட்சியின் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 10வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார் என்பது குறிப்பிடதக்கது.