இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
நாகையில் நடந்த வேட்டுவம் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் இறந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘தங்கலான்’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் அடுத்து இயக்கி வரும் படம் ‘வேட்டுவம்.’ பா.ரஞ்சித்தின் நிலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்ட நிலையில், கார் ஸ்டண்ட் மாஸ்டரான சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். கார் ஸ்டண்ட் மாஸ்டர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதில், மோகன்ராஜ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகையில் நடந்த வேட்டுவம் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் இறந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளில் பா.ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.