×

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு

 

சென்னையில் SIR-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த நான்காம் தேதி முதல் வாக்காளர்கள் சிறப்புத் தீவிர பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த பணிக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்கழகமும் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் சென்னை சிவானந்தா சாலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் பணிகளை கைவிட வேண்டும் என்றும் தவெகவினர் முழக்கமிட்டனர்.

இந்நிலையில் சென்னையில் SIR-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவை சேர்ந்த 2500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.