#BREAKING கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு
ரூ.634 கோடி லஞ்ச புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. லஞ்ச மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணியில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்த லஞ்ச விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பெயரும், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் பெயரும் அதிகளவில் அடிப்படுவதாக சொல்லப்பட்டது குறிப்பிடதக்கது.