☰
×

சின்னத்திரை நடிகரும், பாஜக நிர்வாகியுமான ரவி மீது வழக்குப் பதிவு

 

பெண் தொகுப்பாளினியிடம் ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் சின்னத்திரை நடிகரும், பாஜக நிர்வாகியுமான ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெண் தொகுப்பாளினியிடம் ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் சின்னத்திரை நடிகரும், பாஜக நிர்வாகியுமான ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 14-ஆம் தேதி அன்று யூடியூப் சேனலுக்கு நேர்காணலுக்கு சென்ற பாஜக நிர்வாகி ரவி, நேர்காணல் முடிந்த பின்பு பெண் தொகுப்பாளினியின் அநாகரீகமாக நடந்ததோடு, ஆபாசமாக பேசியதாகவும் பெண் தொகுப்பாளனி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி பாஜக பிரச்சார பிரிவின் மாநில செயலாளர் ரவி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.