×

ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் வழக்குப்பதிவு

 

கலவரத்தை துாண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, விஜய் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும் Genz தலைமுறையும் ஒன்று கூடி அதிகாரத்திற்கு எதிராக புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதே போல் இங்கும் எழும் என்றும், ஆளும் கட்சியின் அருவடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு புரட்சி தான் ஒரே வழி என  தமிழ் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், அரசு மற்றும் காவல்துறை மீது அவதூறு பரப்பி பதிவிட்டார்.


கலவரத்தை துாண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, விஜய் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 192 - கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு, 196(1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள், 197 (1) (d) இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல், 353 (1) (b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது, 353 (2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.