×

“உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்” -  இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு!!

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லியோ படத்தில் அதிகமாக வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு முறையான உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் , வன்முறை , போதை பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை அவர் காண்பிக்கிறார் என மனுதாரர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ராஜ முருகன் தாக்கல் செய்த மனு  நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,  லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.