☰
×

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் தண்டனை!

 

நவ. 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் சூழலில், பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை ரயிலில் கொண்டு சென்றால் ரயில்வே சட்டப்பிரிவு 164ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்வது ரயில்வே சட்டம், 1989-ன் 67, 164, 165 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். விதிமீறலுக்கு ரூ.1,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதனால் ஏற்படும் இழப்புகள், காயங்கள் மற்றும் சேதங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தென்பட்டால், கட்டணமில்லா ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்புகொள்ளலாம் அல்லது பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களிடம் தெரிவிக்கலாம்.