×

காரும் டேங்கர் லாரியும் மோதி விபத்து -  6 பேர் உயிரிழப்பு

 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காக்காப்பள்ளம் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலிருந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.