×

ஒரே பைக்கில் 5 பள்ளி மாணவர்கள் பயணம்! கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

 

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் 5 பேர் ஒரே பைக்கில், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது நேர்ந்த கோர விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூவர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஒரே பைக்கில் 5 பள்ளி மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் திரும்பும்போது எதிரே வந்த கார் மோதி இரு மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியதில், 3 மாணவர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மாணவர்களும் செரத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சாலை விபத்து நடைபெற்ற மேட்டத்தூர் பகுதியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஜஸ்டின், புருனோ ஆகிய இரு தனியார் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். ஆலன், சுஜித், அஜய் ஆகிய 3 மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரூம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மணிக்கும் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.