"கேப்டனும் தேவா அண்ணனும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்"- பிரேமலதா விஜயகாந்த்
தேவா மறையவில்லை. அவரது இசை காற்றில் கலந்துள்ளது என பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக கூறினார்.
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார். தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “வாராரு வாராரு அழகர் வாராரு' என்ற பாடல் கேப்டனுக்கும் தேவா சாருக்கும் இடையிலான பாசப் பந்தத்தை எடுத்துக்காட்டுகிறது. ‘நீங்களே பாடுங்கள்' என்று கேப்டன் சொல்ல, அண்ணன் தேவா அந்தப் பாடலைப் பாடினார். அவர்கள் இருவரும் இந்தப் பூமியில் இல்லை என்றாலும், நிச்சயம் சொர்க்கத்தில் சந்திப்பார்கள். அவர்களது நட்பு சாதாரணமானது அல்ல; உண்மையான பாசத்துடன் பழகினார்கள். 'வானத்தைப் போல' படத்தில் வரும் குடும்பத்தைப் போல, தேவா சாரின் குடும்பம் இருந்தது. எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் தேவா. அவர் மறையவில்லை; அவரது இசை காற்றில் கலந்துள்ளது. இந்தப் பிரபஞ்சம் உள்ளவரை அவரது பெயரும் புகழும் நிச்சயம் நிலைத்து நிற்கும். அவருக்கு எங்கள் குடும்பம் மற்றும் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்