×

சுங்கச்சாவடிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஃபாஸ்டேக் முறைக்கு தடை இல்லை!

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2019 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போதும் கூட 60 சதவிகிதத்துக்கும் மேலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வாங்காததால் அந்த திட்டம் ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது கடந்த ஜனவரி முதல் அமலானது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு தடையற்ற பயணத்தை
 

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2019 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போதும் கூட 60 சதவிகிதத்துக்கும் மேலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வாங்காததால் அந்த திட்டம் ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது கடந்த ஜனவரி  முதல் அமலானது.

இதனால், வாகன ஓட்டிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, வாகனங்கள் விரைவாக டோல்பூத்தை கடக்க டோல் பிளாசாவில் ஏற்படுத்தப்பட்ட வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்றும், ஃபாஸ்டேக் ஒட்டிய வாகனங்கள் டோலில் நிற்காத வகையில் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண முறைக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சென்னை வழக்கறிஞர் கபிலன் மனோகரன் தாக்கல் செய்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.