×

"தனியாக நின்றால் திமுகவை வீழ்த்த முடியுமா?" - விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் ஓபன் கேள்வி!

 
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கமலாலயத்தில் அளித்த பேட்டியில்,

2026ல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றும் திமுகவை தோற்கடிப்பதுதான் விஜயின் நிலைப்பாடு என்றும் தனியாக நின்றால் அது சாத்தியமா? என்பதை அவர் யோசிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

திருமாவளவன் இன்னும் எத்தனை RSS பிள்ளைகளை கண்டுபிடிக்கப் போகிறார்? என்று கேள்வி எழுப்பிய அவர், இன்னும் நிறைய பிள்ளைகளை கண்டுபிடித்து வயிறு எரியட்டும் என்றும் திருமாவளவனுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.