இது உங்களால் நம்ப முடிகிறதா..? தங்கம் விலை ஒரே வருடத்தில் 63% உயர்ந்திருக்கிறது..!
கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை சுமார் ரூ.95,500 ஆக இருந்தது. ஆனால், இந்தாண்டு ஏப்ரல் 15, 2026-ல், அதன் விலை ரூ.1,55,570 என்ற அளவை எட்டியுள்ளது. ஒரே வருடத்தில் தங்கம் 63% விலை உயர்ந்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டை விட இன்று 10 கிராம் தங்கம் வாங்க நீங்கள் கூடுதலாக ரூ.60,000 செலவழிக்க வேண்டும்.
நிபுணர்கள் தங்கத்தின் இந்த விலையேற்றம் இப்போதைக்கு இயல்பு நிலைக்கு திரும்பாது என்று நம்புகிறார்கள்.உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பதையும், உலக சந்தையில் நிலவும் பதற்றமான சூழலையும் பார்க்கும்போது, அடுத்த அட்சய திருதியை (2027) வருவதற்குள் தங்கம் ரூ.2 லட்சம் என்ற அளவைத் தொடக்கூடும்
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கலாமா வேண்டாமா?
நீங்கள் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்க விரும்பினால், இது சரியான நேரமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், அடுத்த ஆண்டு அட்சய திருதியையின் போது விலை ரூ2 லட்சத்தை நோக்கி உயர்ந்தால், இன்றைய ரூ.1.55 லட்சம் கூட உங்களுக்கு மலிவாகத் தோன்றும். உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், கடந்த வாரத்தில் 4% ஏற்றம் கண்ட வெள்ளியையும் (Silver) நீங்கள் கருத்தில் கொள்ளலாம். வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பூஜை சாமான்கள், விளக்குகள், வெள்ளி தட்டுக்கள், வெள்ளிக் குடங்கள், சாமி விக்ரகங்கள் போன்றவற்றை வாங்கி சேமித்துக் கொள்ளலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயன் அளிக்கலாம்.