"இங்கேயே இருக்கலாமா... இல்ல துபாய் போயிடலாமா?" - எதிர்க்கட்சிகளை வடிவேலு பாணியில் கலாய்த்த அமைச்சர் அருண்ராஜ்!
Sep 30, 2026, 16:39 IST
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,
முதல்வர் விஜயின் மக்கள் வரவேற்பு குறித்து பேசினார். அப்போது, “ஒரு முறை பார்த்தால் போதும், ஒரு முறை சிரித்தால் போதும், நம்மை பார்த்து கை அசைத்தால் போதும் என கொளுத்தும் வெயிலில் லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள் என்றால், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் நம் தலைவர்” என்று கூறினார்.
மேலும், “இங்கேயே இருக்கலாமா, இல்லை துபாய் போகலாமா என வடிவேலு மாதிரி எதிர்க்கட்சிகள் நினைக்கத் தொடங்கிவிட்டன” என்றும் அமைச்சர் அருண்ராஜ் தனது உரையில் குறிப்பிட்டார்.
இடைத்தேர்தல் களத்திலேயே திமுக இல்லை: அமைச்சர் அருண்ராஜ்#Arunraj | #TVK #CMVijay | #ByElection | #Dharapuram#News18TamilNadu #TamilNews pic.twitter.com/r8Lph75L5t
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 30, 2026