×

#CAA என்ற பெயரில் வன்முறையில ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்: சரத்குமார் ஆவேச பதிவு!

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி வன்முறை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை
 

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி வன்முறை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது.  இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த வன்முறையாளர்களைக் கண்டதும் சுட  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி வன்முறை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘#CAA என்ற பெயரில் நடந்தேறும் வன்முறை, நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குலைக்கும் எந்த ஒரு செயலும் இனி தொடராமல் செய்வது நமது ஒவ்வொருவரது கடமை. அரசாங்கம் பாரபட்சமின்றி வன்முறையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.