இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரம் என்ன?
Oct 6, 2026, 10:30 IST
மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டுகள் என 5 முனை போட்டி நிலவி வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணிவரை பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது.
அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், தாராபுரத்தில் 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.