தவெக மாநாடு- போலீஸ் கேட்ட 42 கேள்விகளுக்கு 2 நாட்களில் பதிலளிப்போம்: ஆனந்த்
திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் ஆஜரானார்.
மதுரையில் நடக்க உள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு ஏற்பாடுகள் குறித்து, போலீசார் 42 கேள்விகளை முன் வைத்துள்ள நிலையில், மாநாட்டு தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் வருகிற 21ஆம் தேதி மாநாடு நடக்க உள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திருமங்கலத்தில் உள்ள காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, மாநாடு நடக்க உள்ள இடம், எவ்வளவு தொண்டர்கள் வருவார்கள் , வாகன நிறுத்துமிடம், உணவு, தண்ணீர் , சிசிடிவி கேமரா, பாதுகாப்பு , கலந்து கொள்ளும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 42 கேள்விகளை காவல்துறை சார்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு விரைவில் பதில் அளிப்பதாக தெரிவித்த பொதுச் செயலாளர் ஆனந்த், அங்கிருந்து வெளியே வரும்போது நிருபர்கள் இது குறித்து கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார். இரண்டு நாட்களுக்குள் போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக, ஆனந்த்கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.