×

ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயிலின் அடியில் சிக்கிய வியாபாரி: மயிரிழையில் உயிர் பிழைத்த அதிர்ச்சி சம்பவம்..!

 

ஓடும் ரயிலில் ஏற முயன்று, ரயிலின் அடியில சிக்கிய பின்னரும் எவ்வித காயங்களுமின்றி வியாபாரி ஒருவர் உயிர் பிழைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருவோர வியாபாரி ஒருவர், புறப்பட்டு சென்றுகொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அவர் விழுந்ததால், ரயில் அவர் மீது ஏறிச் செல்வது போல் காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஆனால், ரயில் முழுமையாக கடந்து சென்ற பிறகு, அதிர்ஷ்டவசமாக அவர் எவ்வித தீவிர காயங்களும் இன்றி சுதாரித்து எழுந்து அங்கிருந்து நடந்து சென்றார்.

பெரும் சோகத்தில் முடிந்திருக்க வேண்டிய இந்தச் சம்பவம், மயிரிழையில் பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், ஓடும் ரயிலில் ஏறுவது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என ரயில்வே நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

🚨 SHOCKING | Indian Railways: A man was caught displaying shocking negligence after leaving his belongings behind and attempting to board a moving train. The incident serves as a reminder that carelessness around trains can be extremely dangerous. pic.twitter.com/MSaK7k2coN

— indiainlast24hr (@indiain24hr) August 30, 2026