2 மகன்கள், மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை!
2 மகன்கள், மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை!
சென்னையில் கடன் தொல்லையால் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தும், மனைவியை கொன்று விட்டு, தொழிலதிபர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தொழிலதிபர் சிரஞ்சீவி தாமோதர குப்தா(45), என்பவர் தற்கொலை செய்துகொண்டார். மனைவி ரேவதி(36), மகன் ரித்விக் ஹர்ஷத்(15), மற்றொரு மகன் திக்சித் ஹர்ஷத்(11) ஆகிய மூன்று பேரையும் பாலீதின் கவரை முகத்தில் மூடி கொலை செய்து விட்டு தொழிலதிபர் சிரஞ்சீவி தற்கொலை செய்துகொண்டார். சிரஞ்சீவி சென்னை அண்ணா சாலையில் எலக்ட்ரானிக் உபகரணங்கள் விற்பனை கடை வைத்திருந்ததாகவும், கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவு எடுத்ததாகவும் நீலாங்கரை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் எதையும் இதற்கு மேல் திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் சிரஞ்சீவி என்னும் நான் எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்கிறோம், எங்களது இறப்பிற்கு யாரும் பொறுப்பில்லை, இதை நான் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன் என கடிதத்தில் சிரஞ்சீவி மற்றும் ரேவதி கையொப்பமிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக நான்கு உடல்களை நீலாங்கரை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.