×

10 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் வரவில்லை! போராட்டத்தில் குதித்த மதுரை மக்கள்

 

சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வரவில்லை எனக் கூறி மதுரையில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வரவில்லை எனக் கூறி மதுரையில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை பயன்படுத்தி சில பேருந்துகள் கூடுதலாக ரூ.200 வரை வசூலிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் கிடைக்காததால் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலிலில் ஈடுபட்டனர். இரவு முதல் வந்த பேருந்துகள் அனைத்தும் பெயர் பலகையை அணைத்துவிட்டு வந்ததாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.